Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழகம் முழுக்க சுற்று பயணம், மக்களை இணைக்க புதிய ஆப் : கமல் அறிவிப்பு

07 நவ, 2017 - 13:46 IST
எழுத்தின் அளவு:

பிறந்தநாளில் அரசியல் பயணத்திற்கு அச்சாரம் போட்டுள்ள கமல், தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்ய இருக்கிறார், அதோடு மக்களை இணைக்க மய்யம் விசில் என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 50 ஆண்டு காலமாக சினிமாவை ஆட்சியை செய்து கொண்டிருக்கும் கமல், இப்போது அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, அவருடைய டுவிட்டர் கணக்கில் அரசியல் சார்ந்த, சமூக நலம் சார்ந்த பல கருத்துக்களைத் தைரியமாகப் பதிவிட்டு வருகிறார். கமல் இன்று(நவ.7) தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கமல் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கமல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன்,

மக்கள் பிரச்னையை அறிய தமிழகம் முழுக்க சுற்றுபயணம் செய்ய இருக்கிறேன். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒரு படம் எடுக்கவே 6 மாதம் பயிற்சி செய்பவன் நான், அரசியல் அதை விட பெரிய பணி.

அரசியல் பயணத்திற்கான நிறைய முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அஸ்திவாரத்தை வலுவாக அமைக்க வேண்டி இருப்பதால் சில அறிஞர்களுடன் பேசி வருகிறேன், அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரம் தற்போது பழுதாகி உள்ளது. பிரச்னைகளுக்கான குரலை வலுப்படுத்த வேண்டும். நல்ல தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு.

மய்யம் விசில் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நியாயத்திற்கான குரல் எழுப்பும் கருவியாக இருக்கும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்...

பிராமண சமுதாயத்தை தேடி நான் சென்றது இல்லை. என்னுடைய நண்பர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கின்றனர். என்னை நாத்திகன் என அழைப்பதை நான் ஏற்கவில்லை, பகுத்தறிவாளன் என்பதையே விரும்புகிறேன். நான் பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன். என்னை இப்படியே ஏற்று கொள்ளுங்கள்.

இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. என்னை இந்து மத விரோதி என்று தற்போதும் விமர்சிக்கின்றனர். நான் இந்து மத விரோதி இல்லை. எனக்கு பிராமணர்களும் ஏற்க வேண்டும். அல்லாதவர்களும் ஏற்க வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள் என்றார்.

Advertisement
ஆயிரம் கோடி அழகி அனுஷ்காஆயிரம் கோடி அழகி அனுஷ்கா "Whistle App" : கேரளாவை பின்பற்றுகிறாரா கமல்...? "Whistle App" : கேரளாவை பின்பற்றுகிறாரா ...


வாசகர் கருத்து (4)

Saravanan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 நவ, 2017 - 10:17 Report Abuse
Saravanan this is no more cinema news.
Rate this:
selva kumar - port blair,இந்தியா
07 நவ, 2017 - 18:45 Report Abuse
selva kumar நீங்கள் உங்களை இந்து மத விரோதியில்லை என்று திருத்திக்கொண்டது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்,அதனால்தானோ என்னவோ இன்று விமர்சன பட்டியலில் அரபுக்காரரையும்,ஆங்கிலேயரையும் காணவில்லைபோலும்............
Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
07 நவ, 2017 - 14:46 Report Abuse
Paranthaman எனது ஆசான் புரட்சி தலைவர் எம்ஜியாரின் மக்களை கவரும் சக்தி வேறு எவருக்கும் வராது.
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
07 நவ, 2017 - 14:30 Report Abuse
rajinidasan அப்டியே உங்க லிஸ்டில் இதையும் சேத்துக்குங்க.... தமிழ் சினிமாவுக்கு முத்தக்காட்சி கொண்டு வந்தது.... ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை தூக்கி குப்பையில் போட்டது..... லிவிங் டுகெதர் அறிமுகப்படுத்தியது.... கல்யாணம் செய்தால் தேவையில்லாமல் போர் அடித்தவுடன் விலகமுடியாமல் கோர்ட் , கேஸ் , நிவாரணம் என்று அலையாமல் எஸ்கேப் ஆவதை தமிழக மக்களுக்கு சொல்லிகுடுத்தது இது போன்ற கலாச்சாரத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதை சொல்லுங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in