ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர். தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கருட வேகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் ஷிவானி. இப்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
ஷிவானி நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் நவநிர்மான் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை வேகமாக ஓட்டிவந்த ஷிவானி சாலையில் இருந்த வேகத் தடையை கவனிக்கவில்லை. இதனால் திடீர் வேகத்தடையால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு காரின் மீது மோதி நின்றது. இதில் ஷிவானிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சேதமடைந்த காரின் உரிமையாளர் ஷிவானி மீது ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.