ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீபாவளிக்கு 'மெர்சல்' படம் தனி மெஜாரிட்டியாக வந்து இன்னமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த வாரம் வரை அந்தப் படம் தாக்குப் பிடித்துவிடும். கடந்த இரண்டு வாரங்களாக பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. இந்த வாரமும் பெரிய படங்கள் வரவில்லை. இருந்தாலும் அடுத்த கட்டத்தில் உள்ள ஹீரோக்கள் நடித்துள்ள படங்கள் வருகின்றன.
தொடர்ந்து மிகச் சுமாரான வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'இப்படை வெல்லும்', 'மாநகரம்' என்ற வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷன் நடித்துள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஆகிய படங்கள் வருகின்றன. இந்தப் படங்களுக்குப் போட்டியாக நயன்தாரா நடித்துள்ள 'அறம்' அமையுமா என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து '143' என்ற ஒரு படமும் வெளிவருகிறது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது. அதிலும் இரவுக் காட்சிகளுக்கு மக்கள் வருவதேயில்லை என்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த வாரம் வரும் படங்கள் மழைக்காலத்தை எப்படி சமாளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.