ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் அவ்வப்போது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கல்விக்கும், மருத்துவத்துக்கும் உதவி வருகிறார். இந்த உதவிகளை முறைப்படி செய்வதற்காக விஷால்ஆப் தொடங்குகிறார். உதவி தேவைப்படுகிறவர்கள் இந்த ஆப் மூலம் விஷாலை தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் V Shall என்ற அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் . இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் . இவ்வாறு அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.