Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனை 'ஓவர் டேக்' செய்த சித்தார்த்

04 நவ, 2017 - 15:35 IST
எழுத்தின் அளவு:
Siddharth-overtakes-kamal

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்கு என்று ஒரு தனிப் பெயர் இருந்தது. 'காதல் இளவரசன்' என்று பட்டப் பெயரில் அழைக்கப்பட்டாலும், கிசுகிசுக்களில் எல்லாம் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது 'முத்த நடிகர்' என்று தான் அப்போது குறிப்பிடுவார்கள். அந்தக் காலத்திலேயே அவர் படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு முத்தம் தந்து நடித்ததால் அவருக்கு அந்தப் பெயர் வந்தது. காலப் போக்கில் அவரும் முத்தம் கொடுப்பதை குறைத்துக் கொண்டுவிட்டார்.

கமல்ஹாசன் விட்டதை இப்போது சித்தார்த் பிடித்துக் கொண்டுவிட்டார். சித்தார்த் நடித்து நேற்று வெளியான 'அவள்' படத்தைப் பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. படத்தில் அவர் மனைவியாக நடித்திருக்கம் ஆன்ட்ரியாவிற்கு முத்த மழை பொழிந்திருக்கிறார். மாடர்ன் ஆக கதை யோசிப்பவர்கள் ஆன்ட்ரியாவைத் தங்களது படங்களில் நாயகியாக நடிக்க வைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. அவர்களது எண்ணங்களுக்கு ஏற்பட ஆன்ட்ரியாவும் கிளாமராக நடித்து வருகிறார்.

கிளாமராக நடிப்பது வேறு, ஆனால், ஒரு படத்தில் இத்தனை முத்தக் காட்சிகளில் நடிக்க அவர் எப்படி சம்மதித்தார் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. படத்தில் கணக்கிட முடியாத அளவிற்கு சித்தார்த்தும், ஆன்ட்ரியாவும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டு நடித்துள்ளார்கள். 'ஏ' படம்தான் என்றாலும் தமிழ் சினிமாவில் இதுவரை இவ்வளவு முத்தக் காட்சிகள் கொண்ட படங்கள் வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம்.

'ஏ' சான்றிதழ் வழங்கினாலும் தணிக்கைக் குழுவினர் எப்படி இத்தனை முத்தக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கினர் என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது. படத்தின் பெயர் 'அவள்' என்று வைத்துவிட்டு சித்தார்த், ஆன்ட்ரியா போட்டோக்கள் மட்டும் போஸ்டர்களில் இல்லை என்றால் அது 'வேற மாதிரி மலையாளப்' படமாக அமைந்திருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in