ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
உதவி இயக்குநர்கள் மத்தியில் மிஷ்கின், வெற்றிமாறன், ராம் ஆகியோரது செயல் கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ஸ்டுடியோ என்ற அமைப்பின் பெயரில் திரைப்பட உதவி இயக்குநர்களுக்காக திருவண்ணாமலையில் இரண்டு நாட்கள் சினிமா பட்டறை ஒன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பட்டறையில் இயக்குநர்கள் மிஸ்கின், வெற்றிமாறன், ராம், இசையமைப்பாளர் ஆரோல் கரோலி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் நடைபெறும் சினிமாபட்டறைக்கு 10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது தான் சர்சைக்குக் காரணம்.
உதவி இயக்குநர்கள் பலர் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுபவர்கள். அறைவாடகை கொடுக்க வழியில்லாத உதவி இயக்குநர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். யதார்த்த நிலவரம் இப்படி இருக்க, உதவி இயக்குநர்களுக்காக நடத்தப்படுகிற சினிமா பட்டறைக்கு 10 ஆயிரம் கட்டணம் வசூலிப்பது தவறில்லையா? என்று உதவி இயக்குநர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளர்.
சில உதவி இயக்குநர்கள் ஒருபடி மேலே போய் சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் சண்டைக்கே போய்விட்டதாகவும் கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.