ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.O படத்தில் ரஜினி நாயகனாக நடிக்க, அக்ஷ்ய் குமார் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அந்த படக்குழுவில் இருந்து அக்ஷ்ய் குமார் வில்லன் என்று சொல்லவில்லை. ரஜினி கூட அக்ஷ்ய் குமார் நடித்துள்ள வேடம்தான் எனக்கு பிடித்தமான வேடம் என்றுதான் கூறியிருக்கிறார்.
மேலும், 2.ஓ படத்தில் அக்சய்குமார் பல கெட்டப்புகளில் நடித்திருப்பதாக அப்படத்தின் டைரக்டர் ஷங்கர் கூறினார். ஆனபோதும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
இந்தநிலையில், 2.ஓ படத்தில் அக்ஷ்ய் குமாரின் வேடம் குறித்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் டாக்டர் ரிச்சர்ட் என்ற வேடத்தில் நடிக்கிறாராம். பூமியை பேரழிவிற்கு கொண்டு செல்லும் தீய சக்திக்கு எதிராக போராடும் வேடத்தில் அவர் நடிக்கிறார். இருப்பினும் அவரது ஆவேசமான நடிப்பும், கெட்டப்பும் வில்லத்தனத்தை வெளிப்படுத்துவது போல் இருக்கும் என்கிறார்கள்.