சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |
சேவற்கொடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார காட்சிகள் இடம்பெறுகின்றன. பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இரா சுப்பிரமணியம் கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இவர் டைரக்டர் ராதாமோகனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
சேவற்கொடி குறித்து சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், பிறரைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் தனிமனித கோபம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்ற கருவுடன் படத்தை இயக்கி வருகிறேன். திருச்செந்தூரில் நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. திருச்செந்தூரின் புகழ்பெற்ற சூரசம்ஹார காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் நாயகனும், நாயகியும், வில்லனும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.