ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விநியோகஸ்தராக இருந்த ஆர்.கே.சுரேஷை தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் பாலா. அந்தப் படத்தையடுத்து இப்படை வெல்லும், தனி முகம், ஸ்கெட்ச், வேட்டை நாய், பில்லா பாண்டி என பல படங்களில் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ். இவற்றில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் படமான 'பில்லா பாண்டி'யில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் அஜித் ரசிகராக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக, 'மேயாத மான்' படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களில் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி பட பணிகள் முடிந்தால் பில்லா பாண்டி படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார். பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் டிசம்பர் மாதம் வராத பட்சம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
இந்தப் படங்களோடு, விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'மன்னர் வகையறா' படம் பொங்கலுக்கு வருவதாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இந்நிலையில்தான் ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி'யும் பொங்கல் ரேசில் களமிறங்கவிருப்பதை அறிவித்திருக்கிறார்கள்.