மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கதாநாயகன்'. காமெடி நடிகர் முருகானந்தம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்தார்.
கதாநாயகன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதைவிட தோல்விப் படமாகிப்போனது. அதனால் கடும் அப்செட்டானார் விஷ்ணு விஷால். இந்நிலையில், தனக்கு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் மூலம் வெற்றியை தந்த இயக்குநர் எழிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த படத்திற்கான கதையை எழில் உருவாக்கி வருகிறார்.
இப்போது 'ராட்சசன்', 'சிலுக்குவார் பட்டி சிங்காரம்', 'பொன் ஒன்று கண்டேன்', 'சின்ட்ரெல்லா' முதலான படங்கள் விஷ்ணு விஷால் கைவசம் இருக்கின்றன. இந்தப் படங்களில் ஏறக்குறைய நடித்து முடித்துவிட்டதால் இயக்குநர் எழில் படத்தில் இணையவிருக்கிறார்.