மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கி வெற்றியடைந்த வினோத் இயக்கத்தில், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. 'சிறுத்தை' படத்திற்கு பிறகு இப்படத்தில் மீண்டும் காக்கிச்சட்டை அணிந்து நடித்துள்ளார் கார்த்தி.
சில நிஜ சம்பவங்கள் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, இப்படத்தில் வட இந்திய நடிகர்களான ஜமின் கா, அபிமன்யூ சிங், கிஷோர் கதம், ரொஹித் பதக் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார்த்தி பங்குதாரராக உள்ள 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கின்றன. ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நவம்பர் 2-ஆம் தேதி சென்னை, சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. முன்னதாக நேற்று இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.