ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் 2.ஓ. இந்த படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று துபாயில் நடைபெற்றது. இப்படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்து ஆண்டு ஜனவரி 25-ந்தேதி இந்த படம் உலகமெங்கிலும் வெளியாகிறது.
2.ஓ படத்தை அடுத்து ரஜினி நடித்துள்ள படம் காலா. கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இன்னொரு கேங்ஸ்டர் படம் இது. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டில் திரைக்கு வரும் இந்த காலா படத்தையும் லைகா நிறுவனமே வெளியிடுகிறதாம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்ட நிலையில், விரைவில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவிப்பார் என்று தெரிகிறது.