ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எளிமையான, இயல்பான நடிகராக வளர்ந்து வந்தார் விமல். ஆனால் 2014ம் ஆண்டு வெளிவந்த மஞ்சப்பை படத்திற்கு பிறகு அவருக்கு வெற்றி எட்டாக்கனியாகவே இருந்தது. நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் என வரிசையாக தோல்வியை சந்தித்தார். இதனால் புதிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் சொந்தமாக படம் எடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர் தயாரித்து நடித்த படம்தான் மன்னர் வகையறா.
காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் சாந்தினி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில், பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.
வரப்போகின்ற புது வருடத்தில் வெளியாகும் 'மன்னர் வகையறா' விமலின் திரையுலக பயணத்திற்கு புதுவாழ்வு தருமா என்பதை காண பொங்கல் வரை காத்திருக்க வேண்டும்.