ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்த் திரையுலகத்தில் எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களது படங்களின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில்லை. எப்போதோ ஒரு முறை யாரோ அறிவித்தாலும் அது சரியானதல்ல என்று வாதிடுபவர்கள்தான் அதிகம். இருந்தாலும், அந்தந்த ஏரியா வினியோகஸ்தர்கள் மூலம் சில படங்களின் உண்மை வசூல் நிலவரம் திரையுலகத்திற்குள்ளேயே வட்டமடிக்கும். லாபம் வந்தால் யாரும் பெரிதாக வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால், நஷ்டம் வந்தால் அதை யாருக்கு வேண்டுமானாலும் சொல்வார்கள்.
சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நஷ்டமடைந்த படமாக அஜித் நடித்த 'விவேகம்' படம் அமைந்தது. சுமார் 120 கோடி ரூபாய் செலவில் அந்தப் படம் தயாரானது என்று தகவல் வெளியானது. மிகப் பெரிய அளவில் வியாபரமும் படத்திற்கு நடைபெற்றது. ஆனால், படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் இல்லாமல் சுமார் 30 சதவீத நஷ்டத்தை இந்தப் படம் ஏற்படுத்தியது என்று சொன்னார்கள்.
இன்று 'விவேகம்' படத்தின் மொத்த வசூல் விவரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. படம் மொத்தமாக 110 கோடி ரூபாயைத்தான் வலித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு வியாபாரம் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு நடந்தது. ஆனால், படம் 56 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. சுமார் 30 கோடி வரையே பங்குத் தொகை கிடைத்துள்ளது. படத்தை வாங்கியவர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த நஷ்டத்தை சரிக்கட்டவில்லை என்றால், அஜித்தின் அடுத்த படத்திற்கு சிக்கல் வரும் எனத் தெரிவிக்கிறார்கள்.