ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுந்தர்.சி. இயக்கும் 'கலகலப்பு-2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 4-ஆம் தேதி காரைக்குடியில் துவங்கி 15 நாட்கள் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காசியில் துவங்கியுள்ளது.
காசியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தூர், புனே, ஐதராபாத்திலும் 'கலகலப்பு-2' வின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. வட இந்தியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திரும்புகின்றனர். ஜனவரியில் பாடல்காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
'கலகலப்பு-2' படத்தின் ஷெட்யூல் இப்படி இருக்க, ஜனவரியில் 'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மையில், அடுத்த வருட துவக்கத்தில் சங்கமித்ரா பட வேலைகள் தொடங்கப்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் படத்துறையினர்.