14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'சாஹோ' படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே அது 'பிளேட் ரன்னர் 2049' என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
'பிளேட் ரன்னர் 2049' படம் இந்த மாதம் 6ம் தேதி தான் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. பொதுவாக இப்படி காப்பி அடிப்பவர்கள் பழைய ஹாலிவுட் படங்களிலிருந்து தான் காப்பி அடிப்பார்கள். ஆனால், சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு ஹாலிவுட் படத்திலிருந்தா காப்பி அடிப்பது என வலைதளவாதிகள் 'சாஹோ' இயக்குனரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஹாலிவுட் படத்தின் நாயகன் ரியான் கோஸ்லிங் அணிந்திருந்த நீளமான கோட், முகத்தின் பாதியை ஒரு கருப்புத் துணியால் மறைத்திருப்பது, பின்னணியில் பனி மூட்டம் என அப்படியே காப்பியடித்து 'சாஹோ' போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
'பாகுபலி 2' படம் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிரபாஸின் அடுத்த படத்தில் இப்படி காப்பி விஷயங்கள் இருந்தால் எப்படி என இயக்குனரை நோக்கி பலமான கேள்வி எழுந்துள்ளது. காப்பியை போஸ்டருடன் நிறுத்திக் கொண்டிருப்பாரா....?.