மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த தகவல் உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது வாழ்க்கை படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் முடிவை இந்த வாரம் தான் நடிகர் சஞ்சய் தத் எடுத்தாராம். வாழ்க்கை படத்தில் சிறிய வேடத்திலாவது சஞ்சய் தத் நடித்துள்ளாரா என அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள் என படக்குழு நினைத்ததாம். இதனால் சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால், சஞ்சய் தத்தும் ஒப்புக் கொண்டாராம்.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்க, விது வினோத் சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது.