‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் |
விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான காட்சிக்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் தடைகள் பல கடந்து தீபாவளியான நேற்று ரிலீஸாகி இருக்கும் படம் மெர்சல். இப்படத்தில் மருத்துவம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுட்டி காட்டியிருக்கிறார் விஜய். அதோடு ஜிஎஸ்டி., டிஜிட்டல் இந்தியா போன்றவைகள் குறித்தும் படத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ. தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.