Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டு ரசிகர்களை மெர்சலாக்கும் கேரள விஜய் ரசிகர்கள்

17 அக், 2017 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Kerala-Vijay-Fans-mersal-over-than-TN-Fans

'மெர்சல்' ரிலீஸாகுமா ஆகாதா என்கிற கவலையையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நிச்சயம் சொன்ன நேரத்தில் மெர்சல் ரிலீசாகும் என கடந்த நான்கு நாட்களாக மெர்சல் பட முன் கொண்டாட்டங்கள் மற்றும் பப்ளிசிட்டியில் கண்ணும் கருத்துமாக களமிறங்கி வருகின்றனர் கேரள விஜய் ரசிகர்கள். இப்படி சொல்வதற்காக நம்ம ஊர் விஜய் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் சரி, “எங்களுக்கு (கேரள விஜய் ரசிகர்களுக்கு) போட்டி அஜித் ரசிகர்கள் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தான்” என்பது போன்ற மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

அந்த அளவுக்கு மெர்சல் பப்ளிசிட்டியில் இறங்கி அடித்து வருகிறார்கள் கேரள விஜய் ரசிகர்கள். ஆனால் உண்மையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் (அக்மார்க் மலையாளிகள்) விஜய்யின் மெர்சல் பட ரிலீஸை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்பி என முக்கியமான நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கரவாகனங்களில் ரசிகர்கள் 'மெர்சல்' பேரணி நடத்தி ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.

முன்பு ரஜினி நம் ஊரில் அடியெடுத்து வைத்த சமயத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எப்படி சிம்மாசனமிட்டு அமர்ந்தாரோ, அதேபோன்றதொரு நிகழ்வுதான் தற்போது கேரளாவில் உள்ளவர்கள் விஜய்க்கு கொடுத்து வருகிறார்கள். மெர்சல் படத்திற்கான அவர்களது கொண்டாட்டங்களை டுவிட்டர் பக்கங்களில் பார்த்தீர்கள் என்றால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நன்றாக புரியும்..

Advertisement
வில்லனை பார்க்க விருப்பம் தெரிவித்த ரஜினி..!வில்லனை பார்க்க விருப்பம் தெரிவித்த ... தடைகள் பல கடந்து மெர்சலாய் ரிலீஸான மெர்சல் தடைகள் பல கடந்து மெர்சலாய் ரிலீஸான ...


வாசகர் கருத்து (7)

PR Makudeswaran - Madras,இந்தியா
19 அக், 2017 - 16:28 Report Abuse
PR Makudeswaran முன்பு ரஜினி பின் கமல் தற்சமயம் விஜய் என்று எந்த சினிமா பைத்தியமும் தனி மனித வழிபடு தீருமோ அப்புறம் இவர்கள் ரசிகர் மன்றம் அப்புறம் அரசியல் பிரவேசம். போதும் போதும் சாமி போதும்.
Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
19 அக், 2017 - 06:02 Report Abuse
VOICE தமிழகத்தை போல் தான் கேரளாவில் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க பெரிய மதில் சுவர் ஏறி குதித்து ரஜினி கவுண்டமணி மன்னன் பட ஸ்டைலில் டிக்கெட் வாங்கியதை ஒருமுறை பார்க்கநேரிட்டது ஆனால் அரசியல் கட்சி என்று வரும் பொழுது அவர்கள் நடிகர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் சேர்ந்தோரை மட்டுமே தேர்ந்து எடுப்பார்கள், நம் தமிழ்நாட்டு சினிமா பைத்தியம் போல நடிகரை அரசியல் தலைவர்களாக ஏற்று கொள்ள மாட்டார்கள். .
Rate this:
Praveen - Chennai,இந்தியா
18 அக், 2017 - 16:10 Report Abuse
Praveen 'Vijay.'... Pera kettale summa athiruthilla.... Real hero...
Rate this:
Arabi Adimai - Chennai,இந்தியா
18 அக், 2017 - 11:05 Report Abuse
Arabi Adimai ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருப்பதால் தான் உங்களால் இவ்வளவு சுதந்திரமாக கருத்து எழுத முடிகிறது.. வேறு எந்த நாட்டிலும் சிறுபான்மை மதமாக இருந்து கொண்டு பெரும்பான்மை மதத்திற்கு எதிராக இப்படி பேச மதமாற்றம் செய்ய முடியாது.. குறிப்பாக முஸ்லீம் நாட்டில்.. முஸ்லீம் மற்றும் கிறிஸ்டின் மதத்தினர்தான் உலகம் முழுக்க ஒருவரை ஒருவர் மதவெறி பிடித்து அடித்துக்கொண்டு இறக்கின்றனர்... 120 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியா அமைதியாக இருக்க காரணம் இந்துக்கள் இயேசு மற்றும் அல்லாஹ்வை சாமியாக நினைத்து சகிப்புத்தன்மையோடு பழகுவதால் தான்.. ஹிந்துக்கள் மட்டுமே அனைத்து கடவுளையும் மதம் என்ற போர்வைக்குள் அடைக்காமல் பூஜை அறையில் வைத்து வணங்குவான்.. ஹிந்துக்களை சாதியை சொல்லி பிரித்து வன்மத்தை தூண்டும் மத பிரச்சனைகளை நிறுத்திவிட்டு அவரவர் மதத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும்... அனைத்து மதத்திலும் நல்ல கெட்ட விஷயம் உள்ளது. அதை தற்போதைய காலத்திற்கு ஏற்றாற்போல நல்லவிஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும். மதம் ஒருபோதும்சோறுபோடாது.. மதத்தை தவிர்த்து மனிதத்தை மட்டுமே பார்க்கவும்..
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
18 அக், 2017 - 10:33 Report Abuse
Natarajan Ramanathan மலையாளிகள் படித்தவர்கள்/அறிவுள்ளவர்கள் என்று கேள்வி பட்டேனே அது பொய்யா?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram
  Tamil New Film Bhaskar oru Rascal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in