பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா சர்மா, ஸ்ருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ் நடித்துள்ள படம் சோலோ. பிஜாய் நம்பியார் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 5ந் தேதி தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஒரே நேரத்தில் வெளிவந்தது. ஆனால் தமிழ்நாட்டில் 6ந் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையிட மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததால் ஒரே நாளில் படம் தியேட்டர்களிலிருந்து வாபஸ் பெறப்பட்டது. இப்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் நேற்று முதல் படம் மீண்டும் வெளியிடப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதி வெள்ளிக்கிழமையன்றும் பல படங்கள் திரைக்கு வந்துகொண்டே தான் இருக்கிறது. வெகு சில படங்களே மக்களின் ஆதரவை பெற்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலீஸ் செய்யப்படும். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் சோலோ. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த ஒரு நாளில் சோலோ படத்தை பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவி இப்படத்தை காணும் ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையில் சோலோ படம் தமிழ்நாடு முழுவதும் 80கும் மேற்பட்ட திரைகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.