ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் படங்களுக்கு இசையமைத்த பிறகு மாஸ் இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். அதற்கு முன்புவரை சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்தவர் இப்போது மெகா படங்களுக்கும் இசையமைக்கிறார். அந்த வகையில், தமிழில் சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார் அவர்.
இந்த நிலையில், நானும் ரவுடிதான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும் அதிரடி பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அனிருத். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு என்ற பாடலின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாக தயாராகி விட்டது. அதை அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16-ம் தேதியான வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.