ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விக்ரம் உடைய மகன் துருவ், அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். பாலா இயக்கத்தில் உருவாவிருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரேயா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வரவைழைக்கப்பட்டு ஸ்ரேயா சர்மாவை வைத்து டெஸ்ட் ஷுட் எடுத்திருக்கிறார் பாலா.
சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அதன் பிறகு எந்திரன் உட்பட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா, பெரிய மனுஷியான பிறகு தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபல ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் நடித்த ஸ்ரேயா சர்மாவைப் பார்த்த பாலா, அர்ஜுன் ரெட்டி தமிர் ரீமேக்கில் துருவ் ஜோடியாக அவரை நடிக்க வைக்க முடிவு செய்து டெஸ்ட் ஷூட் பண்ணியுள்ளார். இதற்கிடையில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராவை கமிட் பண்ணலாமா என்ற யோசனையிலும் பாலா இருக்கிறாராம். இதனால் ஹீரோயின் விஷயத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.