Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3300 தியேட்டரில் மெர்சல், அப்படியென்றால் முதல் நாள் வசூல் ?

13 அக், 2017 - 11:48 IST
எழுத்தின் அளவு:
How-much-will-Mersal-collect-in-Firstday

பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 3000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது என்ற பெருமையுடன் வெளிவந்த விவேகம், ஸ்பைடர் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பலமாக விமர்சிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகவும் சொன்னார்கள். 50 நாளைக் கடந்துள்ள விவேகம் 200 கோடியைத் தாண்டியது என்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுமாராக இருந்த விவேகம் படமே 200 கோடி ரூபாயைக் கடந்தது என்றால் அட்லீ, விஜய், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வெளிவர உள்ள மெர்சல் எவ்வளவு கோடியைக் கடக்கும் என விஜய் ரசிகர்கள் இப்போதே கணக்கு போட ஆரம்பித்தார்கள். உலகம் முழுவதும் சுமார் 3292 தியேட்டர்களில் மெர்சல் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். அப்படியென்றால் முதல் நாள் வசூல் எவ்வளவாக இருக்கும். இதோ, ஒரு தோராய கணக்கு....

3292 தியேட்டர்களில் ஒரு தியேட்டரில் ஒரு நாளைக்கு தலா 4 காட்சிகள் என்றால் மொத்தம் 13168 காட்சிகள். ஒரு காட்சிக்கு சுமார் 300 டிக்கெட் விற்றால் கூட 39,50,400 டிக்கெட்டுகள். ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 79,00,80,000 ரூபாய். அதாவது 79 கோடி ரூபாயை மெர்சல் முதல் நாளில் வசூலிக்கும். கூட குறைய சேர்த்துக் கொண்டாலும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதல் நாளில் வசூலிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது தமிழ்த் திரையுலகத்தில் புதிய சாதனை, நடக்குமா ?....

Advertisement
செல்வாவின் பரோல் கதைசெல்வாவின் பரோல் கதை 'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினி 'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினி


வாசகர் கருத்து (6)

Arun - Adu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14 அக், 2017 - 09:45 Report Abuse
Arun வாட் எ காமெடி? போடா சொம்பு தூக்கி ரிலீக்கு முன்பே ஆரம்பிச்சா எப்படியும் படம் லாஸ் அதுக்கு இப்பவே ஸ்டார்ட் பண்ணியாச்சு first day collection 70 சிரோரெஸ், second day 140 சிரோரெஸ்,....tenth day collection 700 crores . வாவ் போங்கடா நீங்களும் உங்க CHANNELUM
Rate this:
Rakesh Pradeep - Bangalore,இந்தியா
13 அக், 2017 - 15:30 Report Abuse
Rakesh Pradeep ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் கடைசியில பிம்பிலீக்கா பிளாப்பி பிளாப்
Rate this:
mp -  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2017 - 14:44 Report Abuse
mp sema comedy
Rate this:
Vijay Raj - Chennai,இந்தியா
13 அக், 2017 - 14:08 Report Abuse
Vijay Raj அப்ப ஏன் காபலி, விவேகம் படத்தை தோல்வின்னு சொல்றீங்க.
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
13 அக், 2017 - 23:10Report Abuse
Naam thamilarantha 2 padamum mokka, paarka mudiyaathu. athaan tholvi entru sollukiroam....
Rate this:
VenkatesanSaminathan - Madurai,இந்தியா
13 அக், 2017 - 12:35 Report Abuse
VenkatesanSaminathan What he acts in all pictures is psychotic or self boasting. Collection record is very essential bastards.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Aval
    • அவள்
    • நடிகர் : சித்தார்த்
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிலிந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in