ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவையும், ராசியையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு சென்டிமென்ட் நிறைந்த உலகம் இது. அந்த ராசி விவகாரத்தால் தங்களது திரையுலக வாழ்க்கையை இழந்தவர்கள் பல பேர். ராசியில்லாத நடிகை, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என முத்திரை குத்தி அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடுவார்கள். அப்படி ஒரு ராசி சிக்கலில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் 'ஸ்பைடர்' நாயகி ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் இதற்கு முன் இவர் நாயகியாக நடித்த 'புத்தகம், என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் படுதோல்விப் படங்கள். ஆனாலும், அதன் பின் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அங்கு ராசியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் மீண்டும் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் நடிக்க வந்தார். அது என்னமோ தெரியவில்லை, அவருடைய தோல்வி ராசி 'ஸ்பைடர்' படத்திற்கும் வந்துவிட்டது. 'ஸ்பைடர்' படத்தில் நடிக்கிறார் என்றதும் கார்த்தி நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள். அந்தப் படமும் தற்போது முடிந்துவிட்டது. இருந்தாலும் ரகுலின் ராசி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலாவது மாறட்டும்.
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்க உள்ள விஜய் படத்திற்கு ரகுல்தான் நாயகி, 'ஸ்பைடர்' படத்தை மனதில் வைத்து அவரை மாற்ற மாட்டார் என்று நம்புவோம்.