பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அரண்மனை-2, ஜில் ஜங் ஜக் படங்களுக்குப்பிறகு சித்தார்த் நடித்துள்ள படம் அவள். இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் உதவியாளர் மிலந்த் ராவ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது சித்தார்த் பேசும்போது, இந்த படத்தின் கதையை நான்கு வருடங்களாக உருவாக்கினோம். எங்களுக்கு தெரிந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த கதை. ஹாரர் படங்கள் நிஜக்கதையில் வருவது ரொம்ப குறைவு. இதற்காக பல ஹாரர் படங்களை பார்த்தோம். ஹாலிவுட் படங்களை மாதிரி நம்ம ஊரில் படங்கள் வருவதில்லையே என சில ரசிக்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டிருக்கிறேன். அதனால் ஹாலிவுட்டுக்கு நிகராக நம்ம ஊரிலும் ஒரு ஹாரர் படம் பண்ண வேண்டும் என்று நினைத்து தான் இந்த அவள் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைத்து பயமுறுத்தி அனுப்ப வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாகவே எனக்கு இருந்தது. அதைத்தான் இந்த படத்தில் செய்திருக்கிறோம். இந்த அவள் படத்தைப்பார்த்த பிறகு இந்த படத்தை ஞாபகப்படுத்தி அவ்வப்போது பேசுவார்கள். அப்படியொரு கதை இது.
தரமணியில் எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்த ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆண்ட்ரியா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பது ஒரு மிகப்பெரிய பலம். வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். இந்தி நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரும், நானும் 12 வருடத்துக்கு முன்பு ஒரு இந்தி படத்தில் நடித்தோம். அதன்பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளோம். இந்த படம் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.