Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை பயமுறுத்தாமல் விடமாட்டேன்: சித்தார்த்

10 அக், 2017 - 10:23 IST
எழுத்தின் அளவு:
I-am-sure-fans-will-fear-says-Aval

ஜில் ஜங் ஜக் படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்து, தயாரிக்கும் படம் அவள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிரத்தினத்தின் உதவியாளர் மிலிந்த் இயக்குகிறார். படம் பற்றி சித்தார்த் கூறியதாவது:

இந்தப் படத்தின் கதையை நானும், மிலனும் இணைந்து எழுதியிருக்கிறோம். மிலிந்தும் நானும் மணிரத்னம் சாரிடம் ஒன்றாக உதவி இயக்குனர்களாக சேர்ந்தோம். அன்றிலிருந்து இருவரும் இணைந்த பணியாற்ற விரும்பினோம். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த கதையை 4 வருடங்களாக உழைத்து உருவாக்கி உள்ளோம். இது ஹாரர் படம். இமாசல பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மைனஸ் 10 டிகிரி குளிரில் ஒரு மாதம் வரை இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருந்து படம் பிடித்துள்ளோம்.

இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் பயமுறுத்தும். கண்டிப்பாக அவர்களால் தனியாக இந்தப் படத்தை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஹாரர் காட்சிகள் இடம்பெறுகிறது. ரசிகர்களை பயமுறுத்தாமல் விடக்கூடாது என்ற வைராக்கியம் கொண்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை. ஆனால் கதையும், காட்சி அமைப்பும் பயமுறுத்தும், ஹாலிவுட் படங்களின் தரத்தில் உருவாகி உள்ளது.

ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணரும் அவரது மனைவியும் ஓய்வுக்காக ஒரு பனிமலை பிரதேசத்துக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களின் பக்கத்து வீட்டுக்கு ஜெனி என்ற பெண்ணுடன் பெற்றோர்கள் குடிவருகிறார்கள். அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை அந்த பிரச்சினை இவர்களை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை. இதுவரை பேயை நம்பாதவர்களை நம்ப வைக்கும். நம்புகிறவர்களை பேய் இல்லையோ என்று நினைக்க வைக்கும் அப்படியான ஒரு திரைக்கதை. என்றார் சித்தார்த்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in