சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |
விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும்-நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டனர். நயன்தாரா மீதுள்ள காதலால் தனது முதல்மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார். கடைசியாக தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்து பிரிந்து சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரபுதேவா-நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தாலும், அவரது குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லையாம். சமீபத்தில் கூட இதுதொடர்பாக நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே பிரச்னை உருவானது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன்தாராவுக்கு, பிரபுதேவாவின் மீதான கோபம் அதிகரித்துள்ளதாகவும், இதுவே இவர்களது காதலில் விரிசல் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது இருவரும் சுமூகமாக பிரிவது என்று முடிவு எடுத்து, பிரிந்து சென்று விட்டனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா தனது சொந்த ஊரான கேரளாவுக்கும் போய்விட்டார். இதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாராவும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.