‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம், 2.0 என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினியுடன் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் முன்னணி ரோலில் நடிக்கின்றனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது 3டி, மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. மேக்கிங் வீடியோவை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிட்டனர். ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இந்த வீடியோவை யுடியூபில் 87 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்தனர்.
இந்நிலையில் 2.0 படத்தின் 3டி மேக்கிங் வீடியோ இன்று(அக்., 7) மாலை வெளியிடப்பட்டது. அதில் படம் எப்படி 3டி-யில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு தொழில்நுட்பம் எப்படி கை கொடுத்தது, அதன் அனுபவம் என்ன, என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினி, அக்ஷ்ய் குமார், ஷங்கர், நீரவ் ஷா உள்ளிட்ட பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். 3.35 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் 2.0 படம், 3டி உருவாக்கப்பட்டதை படக்குழுவினர் 3டியில் பார்த்து அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த வீடியோவை பார்க்கும் போது நிச்சயம் இந்திய சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய விஷூவல் 3டி டீரிட் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. 2.0 படம் அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே '2.0' - 3டி மேக்கிங் வெளியிடப்பட்ட 15 நிமிடத்தில் 66 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர், 7 ஆயிரம் லைக்குகள் கிடைத்தன. இதனால் சமூக வலைதளங்களில் '2.0' 3டி மேக்கிங் டிரண்ட்டாகிவிட்டது.