ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்த படம் கருப்பன். ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கி இருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். கடந்த 29ந் தேதி படம் வெளிவந்தது. விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இது சசிகுமார் பாணியிலான படம். இருவேறுபட்ட விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்தது. இந்த வாரத்துடன் தியேட்டரை விட்டு திரும்பியிருக்க வேண்டிய கருப்பனுக்கு அடித்தது யோகம்.
தமிழக அரசு விதித்துள்ள 10 சதவிகித கேளிக்கை வரியை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் 6ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் நேற்று வெளிவர வேண்டிய 7 படங்கள் வெளிவரவில்லை. இதனால் அந்தப் படத்திற்கு ஒதுக்கி வைத்திருந்த தியேட்டர்களை கருப்பனுக்கு கொடுத்து விட்டார்கள். இதனால் கருப்பன் படத்திற்கு 100 தியேட்டர்கள் வரை அதிகரித்துள்ளது. இதனால் படத்தை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்டாண்டர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். தர்மதுரை, இறைவி உள்ளிட்ட விஜய்சேதுபதியின் படங்களை தொடர்ந்த வெளியிட்டு வருகிறவர் இவர்.