‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் அவர்களது ரசிகர்கள் அந்த படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போது முன்னணி நடிகராக விட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களை கொடுத்து விடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில படங்களும் வெளியாகி விடுகிறது.
இதுகுறித்து விஜயசேதுபதி கூறுகையில், எனக்கும் என் படம் எப்போது வரும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால், நட்பு வட்டார டைரக்டர்களின் அன்புக்கு இணங்க பல படங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது. என்றாலும், இந்த நிலையை இனிமேல் தொடர விடமாட்டேன். காரணம், என் முகத்தை அடிக்கடி பார்த்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். ஏனென்றால் நான் சுமார் மூஞ்சி குமாரு என்பது எனக்குத் தெரியும். அதனால் இனிமேல் நானும் பட எண்ணிக்கையை குறைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கப்போகிறேன் என்கிறார் விஜய் சேதுபதி.