‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சிறையிலிருந்த ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் திலீப்பை பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வருகின்றனர். மலையாளத்தில் நிவின்பாலி நடித்த '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' ஆகிய படங்களை இயக்கிய அப்ரிட் ஷைனும், நேற்று திலீப் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இதற்கிடையே திலீப்பை பார்க்க அவர் செல்லும்போதும், பார்த்துவிட்டு வெளியே வந்தபோதும் வெளியில் நின்ற புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் அவரை தொடர்ந்து படம்பிடிக்கவே அதனால் எரிச்சலானார் அப்ரிட் ஷைன்.
வீட்டிற்கு வெளியே நின்று படம் பிடித்து என்ன செய்யப்போகிறீர்கள் என கோபமாக கேட்டவர் சில கடுமையான வார்த்தைகளையும் பிரயோகித்தாராம். அதற்கு அங்கிருந்த வீடியோகிராபர்கள், உங்களுடைய காரை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தியுள்ளீர்கள்.. அதைத்தான் நாங்கள் படம்பிடித்தோம் என கூறியுள்ளனர்..
இந்தநிலையில் “ஏதோ ஒரு வேகத்தில் நான் அவ்வாறு நடந்துகொண்டேன்.. நான் பேசிய விதம் தவறு தான்” என தனது செயலுக்கு புகைப்பட கலைஞர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அப்ரிட் ஷைன்.. இதில் என்ன பியூட்டி என்றால், இந்த அப்ரிட் ஷைன் சினிமாவுக்கு வருவதற்கு முன் இதேபோல ஒரு பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றியவர் என்பது தான். கடந்துவந்த பாதையை மறப்பது என இதைத்தான் சொல்கிறார்களோ..?