‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கடந்தவாரம் திலீப்புடன் இணைந்து பிரயாகா மார்ட்டின் நடித்த ராம்லீலா படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்த வெற்றிச்செய்தி திலீப்புக்கு மட்டுமல்ல நாயகி பிரயாகாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை மலையாளத்தில் பிரயாகா மார்ட்டின் நடித்த படங்களில், அவரது நடிப்பு நன்றாக பேசப்பட்டாலும் அவை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.. அந்தவகையில் பிரயாகவுக்கு ராம்லீலா தான் முதல் வெற்றிப்படம்.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் ஹீரோவையே கொலைக்குற்றத்தில் இருந்து காப்பாற்றும் ஹீரோயினாக, பிரயாகாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்ததில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. படம் வெற்றி பெற்றதை அறிந்து பிரயாகா உட்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தாலும், ஹீரோ திலீப் சிறையில் இருந்ததால் அதை கொண்டாடாமல் அமைதி காத்தனர். தற்போது சிறையிலிருந்து திலீப் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், பிரயாகா, தனது வீட்டில் வைத்து 'ராம்லீலா' படத்தின் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த காமெடி நடிகர் கலாபவன் சாஜன் உடனிருந்தார்.