Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ரஜினி அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு?: பாபி சிம்ஹா

06 அக், 2017 - 00:16 IST
எழுத்தின் அளவு:
What-wrong-while-Rajini-entering-in-Politics-says-Bobby-Simha

சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர், பாபி சிம்ஹா. ஹீரோ, வில்லன் என, எந்த அடையாளத்துக்குள்ளும் முடங்காமல், நல்ல நடிகர் என, ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டவர். தன் திரையுலக அனுபவம் குறித்தும், சமீபத்தில் வெளிவந்த, கருப்பன் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், அவர் பகிர்ந்ததாவது:

கருப்பன் படத்தில் கதை கேட்காமலேயே நடிக்க சம்மதித்தீர்களாமே?
ஆமாம், விஜய் சேதுபதிக்கும், எனக்கு மான நட்பு, இப்போது துவங்கியது இல்லை. சினிமாவுக்கு வரும் முன், இருவரும் இணைந்து, 10க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்து உள்ளோம். இருவருக்குமே ஒரு புரிதல் உண்டு. அந்த அடிப்படையில் தான், கருப்பன் படத்தில் நடிக்க, விஜய் சேதுபதி அழைத்த போது, கதை கேட்காமலேயே நடிக்க சம்மதித்தேன்.

வில்லன், ஹீரோ எந்த ரோலில் நடிப்பது பாதுகாப்பானதாக நினைக்கிறீர்கள்?
அப்படி பிரித்து பார்க்க முடியவில்லை. எந்த ரோல் கிடைத்தாலும், அதில் என்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் பார்ப்பேன். கருப்பனில் வில்லனாக நடித்தேன்; திருட்டுப் பயலே - 2ல், ஹீரோவாக நடிக்கிறேன். கருப்பனில் நான் நடித்த சில காட்சிகளில், ரசிகர்கள் கைதட்டி பாராட்டுகின்றனர்; இது தான் எனக்கு வேண்டும்.

இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்க தயக்கம் இல்லையா?

எனக்கு அந்த பயம் இல்லை. நன்றாக வருமா; சரியாக இருக்குமா என யோசித்தாலே, நாம் தோற்றுப் போய் விடுவோம். முதலில், நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். புதுமுகம், பழைய முகம்; அந்த இயக்குனர், இந்த இயக்குனர் என, எதைப் பற்றியும் யோசிக்க மாட்டேன்.

சமீபத்தில் நீங்க நடித்த படத்தில் ரொம்ப பிடித்தது எது?
திருட்டு பயலே - 2. கதை கேட்டதுமே ஷாக் ஆயிட்டேன். இப்படி ஒரு கதை எதற்கு... நம்மைச் சுற்றி, இவ்வளவு விஷயங்கள் நடக்குதா என, யோசித்தேன். அமலா பால், எனக்கு ஜோடி; பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். இதுவரை நடிக்காத ரோல் எனக்கு கிடைத்துள்ளது; இதற்காக, இயக்குனர் சுசி கணேசனுக்கு நன்றி.

குறும்படங்கள் என்ற கேட்டை, தமிழ் சினிமாவில் உங்களை போன்றவர்கள் தான் திறந்து வைத்தீர்கள்; இப்போது நிலவரம் எப்படி இருக்கு?
இப்போது இந்த திரைத்துறையே சிறப்பாக இருக்கு என்று தான் சொல்வேன். புதுப்புது படைப்பாளிகள் வருகின்றனர்; அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. வெவ்வேறு கதைக்களம் உருவாகிறது.

ஒரு மொபைல் போன் இருந்தாலே, படம் எடுத்துடறாங்க என்ற குற்றச்சாட்டு குறித்து...
இதற்கு முக்கிய காரணம், தொழில்நுட்பம் வளர்ந்தது தான். இப்போது, ஐ - போனில் கூட படம் எடுக்க முடியும். அதற்கான எல்லா வசதியும் அதில் இருக்கு. நாங்கள் படம் எடுக்கும் போது, கேமராவை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அதற்கு, செலவு செய்ய வேண்டும். இதனால், பல திறமைசாலிகள், வேறு வேலைக்கு போயினர். இப்போது, ஒரு மொபைல் போனிலேயே எல்லாவற்றையும் எடுத்து விடலாம். தொழில்நுட்பம் வளர வளர, கற்பனையும் அதிகமாகி கொண்டே போகிறது; மொத்தத்தில், இப்போது, சினிமா கொஞ்சம் எளிதாகி விட்டது.

நீங்கள் தீவிரமான ரஜினி ரசிகர்; ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா?
ரஜினி அரசியலுக்கு வந்தால், என்ன தப்பு; ரஜினி மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி, தான் நடித்த படங்களில், மக்களுக்கான தேவைகளை சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., போன்றவர்கள், சினிமாவில் இருந்து தானே, அரசியலுக்கு வந்தனர். மக்களிடம் அறிமுகமாவதற்கு, சினிமா உதவுகிறது; அந்த விசிட்டிங் கார்டு, ரஜினியிடம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய, யார் வந்தாலும் வரவேற்பேன்.

Advertisement
இந்த வயதில் தான் வித்தியாசமான படங்களில் நடிக்க முடியும் : கவுதம் கார்த்திக்இந்த வயதில் தான் வித்தியாசமான ... எந்த வெற்றியும் எளிதாக கிடைத்தது இல்லை : அட்லி மெர்சல் எந்த வெற்றியும் எளிதாக கிடைத்தது ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in