‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்துள்ளார். புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொள்கிறாரா என்கிற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுக்க இருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.. இப்போது புதிய சிக்கல் என்னவென்றால், திலீப் கைது செய்யப்பட்டபோது, அவர் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'விலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது ஜாமீனில் திலீப் வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் சங்கத்தில் சேர்வாரா, இல்லை சங்கத்தில் சேராமலேயே படங்களில் நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திலீப்பின் ஆதரவாளரும், நடிகரும், நடிகர் சங்க துணைத்தலைவரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார் கூறும்போது,
“திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கியதே தவறு.. அந்த நேரத்தில் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மம்முட்டி அவசர அவசரமாக அறிவித்த முடிவு அது. தற்போது சங்கத்தில் தொடர்வதும் விலகி நிற்பதும் திலீப் எடுக்க வேண்டிய முடிவு. இதே நிலையில் நான் இருந்தால் சங்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு என் வேலையை தொடர்வேன்” என கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தில் சேர்வது குறித்து திலீப் கோரிக்கை வைக்கிறாரோ அல்லது நீக்கியது செல்லாது என சட்டவிதிகளின் படி போராடப் போகிறாரோ தெரியாது, ஆனால் திலீப் கைது செய்யப்பட்டபோது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவரை விலக்கும் முடிவை எடுத்த நடிகர் சங்கம், இனி திலீப்பிற்கு எந்தவித சங்கடங்களையும் தராது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.