‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
85 நாட்கள் சிறைவாசம் முடிந்தநிலையில் நடிகர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை அவரது ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது முறையாக அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் திலீப்பின் உறவினர்கள், ரசிகர்கள் ஆதரவாளர்களுடன், திலீப்பை வைத்து படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது திலீப்பை வைத்து தாங்கள் தயாரித்து வரும் படங்களின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவது குறித்தும், அதற்கான கால்ஷீட் ஒதுக்கீடு குறித்தும் இன்னும் சில தினங்கள் கழித்து திலீப்பிடம் பேச இருக்கின்றனராம்.
திலீப் இறுதியாக கம்மார சம்பவம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் 2௦ நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தினால் இந்தப்படம் முடிந்துவிடும்.. சில நாட்கள் ஓய்வுக்குப்பின் அநேகமாக திலீப் இந்தப்படத்திற்கு தான் முதல் முக்கியத்துவம் தருவார் என தெரிகிறது. பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட் இயக்கும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் சித்தார்த்தின் முதல் மலையாள பிரவேசம் இந்தப்படத்தின் மூலம் தான் நிகழ இருக்கிறது. அதுமட்டுமல்ல, கூடவே பாபி சிம்ஹாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப்படம் தவிர, புரபெஷர் டிங்கன் மற்றும் திலீப்பின் தம்பி தயாரிக்கும் பிக்பாக்கெட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தயாரிப்பில் இருக்கின்றன.