Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் அறிமுக இயக்குனருக்கே வாய்ப்பு தந்த மோகன்லால்

04 அக், 2017 - 15:14 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-again-in-New-directors-movie

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'வில்லன்' படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. அதை தொடர்ந்து தற்போது தான் நடித்து வரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் மோகன்லால். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் பிளாக் மேஜிக் பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த ஸ்ரீகுமார் மேனன் பல விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டிருந்தாலும் சினிமாவை பொறுத்தவரை ஒரு அறிமுக இயக்குனர் தான்.

இந்தநிலையில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மோகன்லாலே வெளியிட்டுள்ளார். ஆச்சர்யமாக இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஒரு அறிமுக இயக்குனருக்கே கொடுத்துள்ளார் மோகன்லால். அஜய் வர்மா என்பவர் இயக்கம் இந்த படத்துக்கு சஜூ தாமஸ் என்பவர் கதை எழுதியுள்ளார், இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்காமல், மூன்ஷாட் என்டர்டெய்ன்மென்ட் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கிறது..

மோகன்லாலின் புதிய படத்தை சில முன்னணி இயக்குனர்கள் இயக்குவார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில், எந்தவித க்ளூவுமே இதுவரை கசியவிடாமல், ஒரு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளது மோகன்லால் ரசிகர்களிடையேயும் திரையுலகத்தினரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
பாராட்டுக்களை குவிக்கும் 'தரங்கம்' : தனுஷ் நன்றிபாராட்டுக்களை குவிக்கும் ... திலீப் பட தயாரிப்பாளர்கள் உற்சாகம்..! திலீப் பட தயாரிப்பாளர்கள் உற்சாகம்..!


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in