எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கடந்த வியாழனன்று மலையாளத்தில் வெளியான படம் தான் தரங்கம். நடிகர் தனுஷ் மலையாளத்தில் முதன்முதலாக தயாரித்துள்ள படம் இது. வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள இந்தப்படம் டார்க் காமெடி வகையை சேர்ந்த படமாக ஆக்சன், க்ரைம், காமெடி என எல்லாம் கலந்துகட்டி உருவாகி இருந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்தவர்களும் இந்தப்படத்தை ரசித்து பார்த்து பாராட்டி வருகின்றனர்..
இந்தப்படத்தை பார்த்துவிட்டு சண்டக்கோழி வில்லன் நடிகரான லால், “இதுவரை நாம் பார்த்து வந்த மலையாள படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட ஸ்டைலில் இந்தப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்துடன் சந்தோஷமாக பார்ப்பதற்கான ஒரு படமாக இதை எடுத்திருக்கிறார்கள்” என பாராட்டியுள்ளார்.
இந்தப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸை வைத்து இதற்கு முன் 'கோதா' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் பஷில் ஜோசப் இந்தப்படம் பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்டு வெற்றியை சந்தித்துள்ளது” என பாராட்டியுள்ளார்.
மலையாளத்தில் தனது தயாரிப்பில் வெளியான முதல் படம் வெற்றி என்பதால் சந்தோஷமடைந்துள்ள நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கும் பாசிடிவ் விமர்சனங்களை முன் வைத்ததற்காக மீடியாவுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.