எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
மோகன்லால் நடிப்பில் அவரது ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் தான் 'வில்லன்'. இந்தப்படத்தில் நடிகர் விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் மாதமே ரிலீசாக வேண்டிய இந்தப்படம், படவேலைகள் முடியாத காரணத்தால் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக கேரளாவில் தீபாவளிக்கு மலையாள படங்கள் எதுவும் ரிலீஸாவது வழக்கமில்லை. தமிழ்ப்படங்கள் தான் அங்கே ஆதிக்கம் செலுத்தும். அதனால் மோகன்லால் படம் ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியானதும் அது ஆச்சர்யமாக பேசப்பட்டது. இந்தநிலையில் தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கியுள்ளது வில்லன் படம். தற்போது அக்-27ஆம் தேதி ரிலீசாகவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் வில்லன் வெளியாக இருக்கிறதாம். தீபாவளி நேரத்தில் விஜயின் மெர்சல் படமும் கேரளாவில் அதிக தியேட்டர்களுக்கு மல்லுக்கு நிற்கும்.. அப்போது, இத்தனை தியேட்டர்கள் மொத்தமாக கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தான் 'வில்லன்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றிவைக்கப்பட்டு உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.