ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பலே வெள்ளையத்தேவா படத்தின் தோல்வியை அடுத்து 'குட்டிபுலி' முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் - 'கொடிவீரன்'. சசிகுமார் உடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா ஆகிய மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்ளில் சனுஷா சசிகுமாரின் தங்கையாக நடிப்பதாக தகவல்.
சசிகுமாரின் 'கம்பெனி புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கும் 'கொடிவீரன்' படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். கொடி வீரன் படத்தை கடந்த மாதமே வெளியிட திட்டமிட்டனர். பட பணிகள் முடிவடையாமல் போனதால் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தீபாவளி ரேசில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படம் இருப்பதால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமே பின்வாங்கிவிட்டது. ஆனால் சசிகுமார் தைரியமாக தன்னுடைய படத்தை மெர்சல் உடன் களமிறக்க இருக்கிறார்.
நயன்தாரா நடித்த 'அறம்' படமும் இப்போது தீபாவளி பந்தயக் களத்தில் குதித்துள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடித்த 'தெறி' ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' தெறி வெளியாகி ஒரு வார இடைவெளியில் வெளியானது. இந்த தீபாவளிக்கு இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.