ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, பசங்க, கோலி சோடா போன்ற படங்கள் வெற்றி பெற்றதால், அந்த படங்களில் நடித்த, மாஸ்டர் நடிகர்களுக்கு பாராட்டு கிடைத்தது. இப்போது, அவர்கள் எல்லாம் வளர்ந்து, இளைஞர்களாகி விட்டனர். இவர்களில் சிலர், ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளனர். இந்த வரிசையில், கோலிசோடா படத்தில் நடித்த கிஷோரும் இணைந்து விட்டார். உறுதிகொள் என்ற படத்தில், ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக, மோகனா என்பவர் நடிக்கிறார். காதலும், மோதலும் நிறைந்த இந்த படத்தில், அதிரடியான பல சண்டை காட்சிகளில், மிகவும், 'ரிஸ்க்' எடுத்து நடித்துள்ளதாக, கிஷோருக்கு பாராட்டு பத்திரம்
வாசிக்கிறது, படக்குழு.