ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சுசீந்திரன், விஷால் சம்பந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவை பெரும்பாலும் லயோலா கல்லூரியில் நடத்துவது வழக்கம். லயோலாவின் முன்னாள் மாணவர் என்பதால் இப்படி செய்வார் விஷால். இந்த வரிசையில் இப்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து விட்டார்.
ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மேயாத மான்'. வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படம் சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், அவருடைய நண்பரும் பாடகருமான பிரதீப் குமாரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளனர்.
இந்த படத்தில் 7 பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டநிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்களின் வெளியீட்டு விழாவை லயோலா கல்லூரியில் நடத்தினர்.
லயோலா கல்லூரி மாணவர்களின் 'Ovations' நிகழ்ச்சி இடையே இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.