ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ள மாதவன், தெலுங்கில் நவ்தீப் நாயகனாக நடித்த ஓம்சாந்தி என்ற படத்தில் மட்டுமே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த நிலையில், நாக சைதன்யா நடிக்கயிருக்கும் ஷாவ்யாசச்சி என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்.
மேலும், நாகசைதன்யா நடித்த யுத்தம் சரணம் செப்டம்பர் 8-ந்தேதி வெளியான நிலையில், ஷாவ்யாசச்சி படத்தின் படப்பிடிப்பை தனது தாத்தா நாகேஸ்வரராவின் பிறந்த நாளான செப்டம்பர் 20-ந்தேதியே தொங்க திட்டமிட்டிருந்தார் நாகசைதன்யா. ஆனால் அக்டோபர் 6-ந் தேதி சமந்தா-நாகசைதன்யா திருமணம் கோவாவில் நடைபெறயிருப்பதால், திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம் நாகார்ஜூனா.
இந்த படத்தில் நாகசைதன்யாவுடன் அனு இம்மானுவேல், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில், இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிப்பது குறித்து மாதவனிடம் கதை சொல்லி ஓகே பண்ணிவிட்ட நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.