டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே 'பராசக்தி' தலைப்புக்கு எதிர்ப்பு |
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பார்த்தால் பசி தீரும் படத்தின் பொன் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. 1962-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில், பீங் சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் "பார்த்தால் பசி தீரும்". இந்த படத்தின் 50வது ஆண்டு விழாவை நடிகர் திலகம் பிலிம் சொசைட்டி மற்றும் பாரத் கலாசார் இணைந்து நடத்தியது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, சச்சு, எம்.என்.ராஜம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், வசன கர்த்தா ஆரூர் தாஸ், இசையமைப்பாளர் ராமமூர்த்தி, பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்த்தால் பசி தீரும் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும், சிவாஜின் மகனுமான ராம்குமார் பேசும்போது, "பா..." வரிசை படங்கள் அப்பாவுக்கு மிகப்பெரிய ஹிட்டுகள் கொடுத்துள்ளது. நொண்டி காலுடன் டூயட் பாடிய ஒரே ஹீரோ அநேகமாக அப்பாவாகத்தான் இருப்பார். இங்கே இருக்கும் சவுகார் அம்மா பத்தி சொல்லனும், 80 வயசிலையும் என்ன இளமையா நகை எல்லாம் போட்டு ஸ்டைலாக இருக்காங்க. எனக்கு இது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.
சவுகார் ஜானகி பேசும்போது, சிவாஜி சார் காலத்தில் நானும் சினிமாவில் இருந்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இதற்காக கலைத்தாயை வணங்குகிறேன் என்றார்.
ஆருர்தாஸ் பேசும்போது, 1961-ல் பாசமலர் ரிலீஸ், 1962-ல் பார்த்தால் பசி தீரும் ரிலீஸ், 1963-ல் புதிய பறவை ரிலீஸ். இப்படி சிவாஜியின் படங்களுக்கு நான் வசனம் எழுதி, என்னை பிஸியாக இருக்க வைத்த காலம் அது. அப்படியே என்னை ஏ.வி.எம்., நிறுவனத்திற்கு அழைத்து சென்றது இந்த படங்கள் தான். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் சிவாஜி என்றார்.
தொடர்ந்து அந்தபடத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் செய்திருந்தார்.