பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
'வாலு' படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்து வரும் படம் - 'ஸ்கெட்ச்'. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியாகி இருக்க வேண்டியது இந்தப் படம். கௌதம் மேனன் இடையில் புகுந்து இந்தப் படத்திற்கு விக்ரம் கொடுத்த கால்ஷீட்டை வாங்கிச் சென்றதால் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆயுதபூஜை அன்று 'ஸ்கெட்ச்' ரிலீஸாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில், இப்போது இப்படம் பொங்கல் விடுமுறையில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விரைவில் 'ஸ்கெட்ச்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவுள்ள சூழ்நிலையில், இப்படத்தின் டீஸரை வரும் தீபாவளியன்று அக்டோபர் 18 வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.