ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். அந்த படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சிம்பு கெட்டவன் படத்தை தூசு தட்டப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியுடன் இணைந்து சிம்புவும் ஒரு நாயகனாக நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், மணிரத்னம் படத்தில் 2018 ஜனவரியில் இருந்து நடிக்கும் சிம்பு, அதற்கு முன்பே அதாவது அடுத்த மாதம் முதல் ஒரு ஆங்கில படத்தை இயக்கி, நடிக்கிறாராம் சிம்பு. அந்த படத்திற்காக தாடி வளர்த்து வரும் அவர் தனது உடல் எடையை 10 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளார். இதேபோல், சிம்புவின் சமகால நடிகரான தனுஷூம், த எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் த பகிர் -என்றொரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.