ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் நடித்து வருபவர், தற்போது ஓய்வுக்காக காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அங்கு கொண்டாடியவர்கள் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் காதல் பறவைகளாய் சுற்றி வருவதோடு, போட்டோக்களையும் இணையதளங்களில் வெளியிடுகின்றனர்.
தமிழகத்தில் பிரபல உணவகமான அஞ்சப்பரின் கிளை, நியூயார்க் நகரில் இருக்கிறது. கண்ணன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் இந்த உணவகத்திற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடன் சென்றிருக்கிறார். அங்கு பல்வேறு விதமான உணவுகளை ருசித்திருக்கிறார். குறிப்பாக நாட்டுக்கோழி மசாலா, மீன் உணவு மற்றும் நெல்லூர் சிக்கன் வகைகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்.
உணவுகள் அனைத்தும் அருமையாக இருந்ததாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் அங்குள்ள டைரியில் எழுதி இருக்கின்றனர்..
தமிழகத்திலிருந்து திரைப்பிரபலங்கள் நியூயார்க் செல்லும் போது இந்த உணவகத்திற்கு விரும்பி சென்று சாப்பிடுகின்றனர்.