Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்கனாவை காப்பி அடிக்க மாட்டேன்: குயின் காஜல் அகர்வால்

25 செப், 2017 - 10:02 IST
எழுத்தின் அளவு:
I-will-never-copy-Kangana-says-Queen-Kajal-Agarwal

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான ஹிந்திப் படம் குயின். 12 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 97 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதோடு சிறந்த படம், சிறந்த நடிகை என இரண்டு தேசிய விருதுகள், இன்னும் பல விருதுகள் உள்பட 32 விருதுகளை குவித்தது.

தற்போது இந்தப் படம் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. தமிழ் மற்றும் கன்னட ரீமேக் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கங்கனா ரணாவத் கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்கிறார், மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே நிறுத்தி விடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் அந்தப் பெண் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தேனிலவு பயணத்தை தனியாக தொடங்குகிறாள். அந்த பயணத்தில் அவள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் தான் படம். தமிழ் கதையில் அந்த சிறிய நகரம் விருதுநகர். அங்கிருந்து பாரிஸ், பார்சிலோனா, லண்டன் ஆகிய இடங்களுக்கு சென்று மீண்டும் விருது நகரில் முடிகிற மாதிரி திரைக்கதை அமைத்துள்ளனர். தமிழ் வசனம் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்க பாண்டியன் எழுதுகிறார்.

குயின் ரீமேக்கில் நடிப்பது பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது: குயின் படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்புடன் அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறேன். படம் ஒரு வலுவான கருத்தை சொல்கிறது. அந்த கருத்தில் எனக்கு 100 சதவிகிதம் உடன்பாடு இருக்கிறது.

கங்கனா நடித்த கேரக்டரில் நடிப்பதால் ஒப்பீடு வரும் என்று சிலர் சொல்கிறார்கள். நான் அவரை காப்பி அடித்து நடிக்கப்போவதில்லை. எனது சொந்த ஸ்டைலில் தான் நடிப்பேன். யாருடைய கால் தடத்தையும் பின்பற்றாமல் என் சொந்த தடத்தில் நடப்பேன். இதனால் ஒப்பீட்டுக்கு அவசியமில்லை. எனது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் என்றார் காஜல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in