மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
2013 ல் கன்னடத்தில் வெளிவந்து சூப்பர்டூப்பர் ஹிட்டான படம் 'லூசியா'. பவன்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சதீஷ் நைனாசாம். 'லூசியா' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னடத்தில் பிஸியான நடிகராக மாறிப்போனார் இவர். கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 20 படங்களில் நடித்து முடித்துள்ளார் சதீஷ்.
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சதீஷ் விரைவில் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ஜெய், நஷ்ரியா நடிப்பில் ஆஸ்கார் ரவி தயாரித்த 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை இயக்கிய அனிஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார் சதீஷ்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாவது குறித்து சதீஷிடம் கேட்டபோது, ''அனிஸ் என்னிடம் அவரின் கதையைக் கூறியபோது என்னால் மறுக்க முடியாத அளவுக்கு அந்தக் கதை எனக்குப் பிடித்துவிட்டது. தமிழில் நானே டப்பிங் பேச வேண்டுமென்பதற்காக இப்போது தமிழ் பேச டியூசன் சென்று கொண்டிருக்கிறேன்'' என்கிறார்.
என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் காசி விஸ்வநாதன். டிசம்பரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.