ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ரா படம் ட்ராப் பண்ணப்பட்டதாக படத்துறையில் பேச்சு கிளம்பியிருக்கிறது.
ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் தகவல் அடிபட்டது. இதற்கிடையில், சங்கமித்ரா பட வேலைகளை ஓரமாக வைத்துவிட்டு கலகலப்பு 2 படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளார் சுந்தர்.சி.
விமல், மிர்ச்சி சிவா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் கலகலப்பு. 2012-ம் ஆண்டில் வெளியான இப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே போன்று முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பு 2 படத்தையும் உருவாக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தில் நடிக்க ஜீவா, ஜெய், நிக்கி கல்ரானி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க ஓவியாவை அணுகியபோது அவர் 1 கோடி சம்பளம் கேட்டதால் காத்ரீன் தெரசாவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். மற்ற கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கலகலப்பு 2 படத்தை குறைந்த நாட்களில் முடித்துவிட்டு, அதன் பிறகு சங்கமித்ரா படப்பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி என்று சிலரும், சங்கமித்ரா படம் ட்ராப்பானதால் தான் கலகலப்பு 2 படத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார் என்று சிலரும் சொல்கின்றனர்.