ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஓவியாவுக்கு தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் நடித்தது எல்லாம் சின்ன பட்ஜெட் மற்றும் இரண்டாம் நிலை ஹீரோக்கள் நடித்த படங்கள் தான். பட வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டதால் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபமும், வரவேற்பும் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு கூட்டம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள பாப்புலாரிட்டியைக் கண்டதும், அதை பணம் பண்ணும் முடிவுக்கு வந்துவிட்டார்.
சாதாரணமாக கடை திறப்பு விழாவுக்கு 50 ஆயிரம் வாங்கிக் கொண்டிருந்த ஓவியா, தற்போது பிரபலமான ஒரு கடையைத் திறந்து வைக்க லட்ச கணக்கில் வாங்கி இருக்கிறார். கடை திறப்பு விழாவுக்கே இப்படி என்றால் படத்தில் நடிக்க எவ்வளவு கேட்பார்? நிறைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓவியாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதைப்பயன்படுத்தி ஓவியாவும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கேட்கிறாராம்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது சரி தானே...!